ஆத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் சாவுநண்பர் படுகாயம்
ஆத்தூர்
ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
நண்பர்கள்
பெத்தநாயக்கன்பாளையம் மேற்கு நாடார் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 21). இவரும், அவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஜீவா (21). கூலி தொழிலாளர்கள். இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆத்தூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் உடையம்பட்டி சுடுகாடு அருகே வந்த போது ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சாவு
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். ஜீவா காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஜீவாவை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜீவா சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து ஓமலூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.