தவறி விழுந்த வாலிபர் சாவு


தவறி விழுந்த வாலிபர் சாவு
x

தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருப்புக்கார தெருவை சேர்ந்தவர் சகாபுதீன் என்பவரின் மகன் முகம்மது மகாதீர் (வயது 25). இவர் வீட்டிற்கு சாப்பிட வராததால் சகாபுதீன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் பாம்பூரணி பகுதியில் உள்ள பெரியப்பாவின் வீட்டிற்கு சென்று தங்கி இருந்தாராம். அங்கு மாடியில் இருந்து கீழே இறங்கும் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்து பலியானார். இதுகுறித்து அவரின் தந்தை சகாபுதீன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story