மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக விளையாட்டு அரங்குகளில் கட்டமைப்பை மாற்ற முடிவு


மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக விளையாட்டு அரங்குகளில் கட்டமைப்பை மாற்ற முடிவு
x

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக விளையாட்டு அரங்குகளில் கட்டமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

தமிழகத்தில் உள்ள விளையாட்டு அரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு என போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே அவர்களின் நலன்கருதி மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றாற்போல் விளையாட்டு அரங்குகளில் சாய்வான நடைபாதை, ஓடுதளம், கழிவறை வசதி என கட்டமைப்புகள் தற்போது, மாற்றி அமைக்கப்பட உள்ளன. கட்டமைப்பை மாற்றி அமைப்பதற்காக விளையாட்டு அரங்குகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தமிழகம் முழுவதும் உள்ள 62 விளையாட்டு அரங்குகளில் ஆய்வு செய்கிறது. இந்நிலையில் முதல் கட்டமாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கலைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜோயல்பிரபு மற்றும் தேசிய மாற்றுத் திறனாளி வீரர்களை கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

1 More update

Related Tags :
Next Story