சாலை விரிவாக்க பணிக்காக இடிக்க முடிவு மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்துக்கு 'சீல்'


சாலை விரிவாக்க பணிக்காக இடிக்க முடிவு மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்துக்கு சீல்
x

சாலை விரிவாக்க பணிக்காக இந்த வணிக வளாக கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது.

சென்னை

சென்னை வியாசர்பாடி கணேசபுரம் அம்பேத்கர் கல்லூரி சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் 20 கடைகள் இயங்கி வந்தன. இப்பகுதியில் கணேசபுரம் ெரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சாலை விரிவாக்க பணிக்காக இந்த வணிக வளாக கட்டிடத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் வணிக வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி தண்டையார்பேட்டை மண்டல அதிகாரிகள் கடைக்காரர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் யாரும் கடையை காலி செய்யவில்லை.

இதையடுத்து நேற்று தண்டையார்பேட்டை மண்டல செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உதவி வருவாய் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் வியாசர்பாடி போலீஸ் பாதுகாப்புடன் வணிக வளாகத்தில் இருந்த கடைகளை காலி செய்தனர். பின்னர் மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்துக்கு 'சீல்' வைத்தனர்.


Next Story