டெல்லி பல்கலைக்கழக தமிழ் துறைக்கு ரூ.5 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


டெல்லி பல்கலைக்கழக தமிழ் துறைக்கு ரூ.5 கோடி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
x

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தமிழ் இலக்கியவியல் தனித்துறைக்கு ரூ.5 கோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை,

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்க ரூ.5 கோடிக்கான காசோலையை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர்களான நெல்லை செ.திவான், விடுதலை ராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சத்தை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மேலும், மறைந்த தமிழறிஞர்கள் நெல்லை கண்ணனின் நூல்களுக்கு ரூ.15 லட்சம் மற்றும் கந்தர்வன் என்கிற நாகலிங்கத்தின் நூல்கள், சோமலெயின் நூல்கள், ந.ராசையாவின் நூல்கள், தஞ்சை பிரகாஷின் நூல்கள் ஆகியவை நாட்டுடமை ஆக்கப்பட்டதற்காக அவர்களின் வாரிசுதாரர்களிடம் உரிமைத் தொகையாக தலா ரூ.10 லட்சத்தை முதல்-அமைச்சர் வழங்கினார்.

தமிழ்ச் செம்மல் விருது

2021-ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.சிவசிதம்பரம், ராணிப்பேட்டை கவிஞர் மா. சோதி, ராமநாதபுரம் அ.மாயழகு, ஈரோடு முத்துரத்தினம், கடலூர் ஆ.நாகராசன், கரூர் கடவூர் மணிமாறன்,

கள்ளக்குறிச்சி இரா.துரைமுருகன், கன்னியாகுமரி சு.கந்தசாமி பிள்ளை, காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த இரா.எல்லப்பனின் சார்பில் அவரது குடும்பத்தினர், கிருஷ்ணகிரி ஆ.ரத்தினகுமார், கோவை மானூர் புகழேந்தி, சிவங்கை வ.தேனப்பன், செங்கல்பட்டு எம்.கே.சுப்பிரமணியன், சென்னை வே.மாணிக்காத்தாள்,

தென்காசி மாவட்டம்

சேலம் இரா.மோகன்குமார், தஞ்சாவூர் ஆறுமுக சீதாராமன், தர்மபுரி கவிஞர் கண்ணிமை, திண்டுக்கல் துரை. தில்லான், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த க.பட்டாபிராமன் சார்பில் அவரது குடும்பத்தினர்,

நெல்லை வ.பாலசுப்பிரமணியன், திருப்பத்தூர் தெய்வ.சுமதி, திருப்பூர் அ.லோகநாதன், திருவண்ணாமலை க.பரமசிவன், திருவள்ளூர் செ.கு.சண்முகம், திருவாரூர் இரெ.சண்முக வடிவேல், தூத்துக்குடி கவிஞர் அ.கணேசன், தென்காசி ஆ. சிவராமகிருஷ்ணன், தேனி மாவட்டம் தேனி சீருடையான்,

நெல்லை மாவட்டம்

நாகை மு. சொக்கப்பன், நாமக்கல் சி. கைலாசம், நீலகிரி போ.மணிவண்ணன், புதுக்கோட்டை வீ.கே. கஸ்தூரிநாதன், பெரம்பலூர் செ.வினோதினி, மதுரை மாவட்டம் நெல்லை ந.சொக்கலிங்கம், மயிலாடுதுறை ச.பவுல்ராஜ், விருதுநகர் அ. சுப்பிரமணியன்,

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த ப.வேட்டவராயன் சார்பில் அவரது குடும்பத்தினர், வேலூர் ம.நாராயணன் ஆகிய 38 தமிழறிஞர்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுடன், விருதுத் தொகையாக தலா ரு.25 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழை முதல்-அமைச்சர் வழங்கினார்.

சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை செ.சுகுமாரன், செ.ராஜேஸ்வரி, மு.வளர்மதி, ராக.விவேகானந்த கோபால், அ.சு.இளங்கோவன். வீ.சந்திரன், ரா.ஜமுனா கிருஷ்ணராஜ்,

தமிழ்ச்செல்வி, மறைந்த ந.தாஸ், மா.சம்பத்குமார் சார்பில் அவரது குடும்பத்தினர் ஆகியோரிடம் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுடன், விருதுத் தொகையாக தலா ரூ.2 லட்சம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை முதல்-அமைச்சர் வழங்கினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் 21-ந் தேதி (நேற்று) நடந்த இந்த நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இரா.செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story