சேதமடைந்த பிரதான சாலைகளை சீரமைக்க கோரிக்கை


சேதமடைந்த பிரதான சாலைகளை சீரமைக்க கோரிக்கை
x

விருதுநகரில் சேதமடைந்துள்ள பிரதான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகர்


விருதுநகரில் சேதமடைந்துள்ள பிரதான சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாலை சீரமைப்பு

விருதுநகர் நகராட்சி பகுதியில் நகராட்சி நூற்றாண்டு விழா நிதியிலிருந்து ரூ.16 கோடி மதிப்பில் நகரில் உள்ள பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டன. அதன் பின்னர் சாலைகள் சீரமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில் உள்ளன.

இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. விருதுநகர் ெரயில் நிலையத்திற்கு செல்லும் ெரயில்வே பீடர் ரோடு சேதமடைந்துள்ள நிலையில் ெரயில் நிலையத்திற்கு செல்லும் வாகனங்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

வாகன விபத்து

சிறு மழை பெய்து விட்டாலும் பள்ளங்களில் நீர் தேங்கியுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் நிலையும் ஏற்படுகிறது. இதேபோன்று மதுரை செல்லும் பஸ்கள் புல்லலக்கோட்டை ரோடு வழியாக செல்லும் நிலையில் புல்லலக்கோட்டை ரோடு சேதமடைந்துள்ள நிலையில் வாகன விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பழைய பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன. பொதுவாக நகராட்சி பகுதியில் பிரதான சாலைகள் அனைத்துமே சேதமடைந்துள்ள நிலையில் சிறு மழை பெய்தாலும் வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது.

நிதி ஒதுக்கீடு

எனவே நகராட்சி நிர்வாகம் சேதமடைந்துள்ள பிரதான சாலைகளை சீரமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்து மேலும் தாமதிக்காமல் இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story