அரசு பள்ளி கழிப்பறையை பராமரிக்க கோரிமாணவர்கள்-கிராம மக்கள் சாலை மறியல்


அரசு பள்ளி கழிப்பறையை பராமரிக்க கோரிமாணவர்கள்-கிராம மக்கள் சாலை மறியல்
x

அரசு பள்ளி கழிப்பறையை பராமரிக்க கோரி மாணவர்கள்-கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மதுரை

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரவெள்ளாளபட்டி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் தலைமை ஆசிரியையை கண்டித்து சத்திரவெள்ளாளபட்டி கிராமமக்கள், மாணவர்கள் நேற்று காலையில் பாலமேடு- வலையபட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பள்ளியில் உள்ள கழிப்பறையில் தண்ணீர் வரவில்லை என கூறியும், இதை முறையாக பராமரிக்காத தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.

தகவல் அறிந்து வந்த பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி சிதம்பரம், மற்றும் போலீசார், வருவாய் துறை அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மூடப்பட்டுள்ள கழிப்பறையை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழுதடைந்த மின் மோட்டாரை சரி செய்து, தண்ணீர் வசதியுடன் துரிதமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது மாதிரி குறைபாடுகள் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். என பெற்றோர் ஆசிரியர் கழகம், மற்றும் கிராம மக்கள் கேட்டு கொண்டனர். இதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.


Related Tags :
Next Story