கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு அகற்றம்


கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு அகற்றம்
x

கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே சுந்தரம் ஊராட்சியில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் கடந்த 45 ஆண்டுகளாக தனிநபர் 750 சதுர அடியில் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளார். மேலும் 5 ஏக்கர் கண்மாய் இடத்தை விவசாய நிலங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனையறிந்த ஊர் பொதுமக்கள் கடந்த 25 ஆண்டுகளாக சாலைமறியல் மற்றும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பெரியகண்மாயில் நீர்வளத்துறையினரும், வருவாய்த்துறையினரும் இணைந்து 750 சதுர அடியில் கட்டியிருந்த வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அதேபோல ஆக்கிரமிப்பு செய்து வேலிகள் அமைத்து விவசாயம் பார்த்த 5 ஏக்கர் கண்மாய் இடத்தையும், விவசாய நிலங்களையும், முள்புதர்களையும் பொக்லைன் எந்திரம் கொண்டு அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி, அரசமலை வருவாய் ஆய்வாளர் அங்குலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி சண்முகசுந்தரம் மற்றும் பொன்னமராவதி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்பட பலர் ஈடுபட்டனர்.


Next Story