மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி சேலத்தில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்


மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி சேலத்தில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2023 1:58 AM IST (Updated: 5 July 2023 1:28 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிசேலத்தில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்

சேலம்

சேலம் மாவட்ட கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டமைப்பு தலைவர் ஜெஸ்டின்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் விமல் மோசஸ், ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகநாதன், பால் அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம், ஈரோடு கிறிஸ்தவ திருமண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் கிறிஸ்துநாதர் ஆலய ஆயர் ஜவகர்வில்சன், லெக்னர் நினைவு ஆலய ஆயர் எழில் ராபர்ட் கெவின் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story