கிருஷ்ணகிரியில்சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில்சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2023 1:15 AM IST (Updated: 12 July 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மதியழகன், மாநில செயலாளர் ஜெயந்தி, மாவட்ட நிர்வாகிகள் சந்திராச்சாரி, தனலட்சுமி, வெண்ணிலா, வெங்கடரத்தினம், குணவதி ஆகியோர் கலந்து ெகாண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களை கொண்டே நடத்திட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். விருப்பத்தின் பேரில் பணி மாறுதல் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

கோஷங்கள்

சத்துணவு மையங்களுக்கு உணவூட்ட செலவினங்கள் பிரதிமாதம் தடையின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் மஞ்சுளா நன்றி கூறினார்.


Next Story