ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்புநடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்புநடைபாதை வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

ஓசூர்

ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், துணை தலைவர் மூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் எந்தவித அறிவிப்பும் இன்றி, நடைபாதை மற்றும் சாலையோர கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு இன்றி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த சிறு வியாபாரிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் நடைபாதை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், சிறு வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட செயலாளர் குணசேகர் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com