மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை கோரிதர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை கோரிதர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தர்மபுரி

தர்மபுரி

தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கலை செல்வம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராசன், மாநிலக்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், தமிழ் குமரன், நிர்வாகிகள் மணி, மாதையன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக நடக்கும் கலவரத்தில் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். வழிபாட்டுத்தலங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த மாநிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. மணிப்பூரில் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அமைதியும், இயல்பு நிலையும் திரும்புவதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story