ஊத்தங்கரையில்அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊத்தங்கரையில்அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணி திட்ட அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொருளாளர் சுஜாதா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சித்ரா வரவேற்று பேசினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் பழனியம்மாள், ஒன்றிய செயலாளர் வேல்விழி, நிர்வாகிகள் உமா, பர்வீன்பானு, ஜோதி, சக்தி, தவ்லத், வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி மையங்கள் இணைப்பு என்கிற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story