தாத்தியம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கக்கோரி ஓமலூரில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தாத்தியம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கக்கோரி ஓமலூரில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

தாத்தியம்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கக்கோரி ஓமலூரில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்

ஓமலூர்

ஓமலூர் அருகே உள்ள தாத்தியம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கக்கோரி ெபாதுமக்கள் மற்றும் இந்திய குடியரசு கட்சியினர் நேற்று ஓமலூர் பஸ் நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட திரண்டனர். இதையடுத்து பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் கருமலை தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் கருமலை தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் மாணிக்கம், மாவட்ட தலைவர் கருப்புசாமி, மாவட்ட செயலாளர் பூபதி, தாத்தியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா, துணைத்தலைவர் வெங்கடாஜலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் சாலை மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொழிற்சங்க தனசேகர், ராமச்சந்திரன், சேட்டு, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story