கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகில் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் மற்றும் மனித உரிமை இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை தடுத்து நிறுத்தக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அருட்தந்தை ஜேம்ஸ் விக்டர் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மறைமாவட்ட தலைமை செயலாளர் ஜான் செல்வம், தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்டாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பெஞ்சமின் டிசூசா அறிமுக உரையாற்றினார். மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தினர், மனித உரிமை இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






