கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2023 7:45 PM GMT (Updated: 18 Oct 2023 7:46 PM GMT)

தேனியில் கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில், தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கால அவகாசம் இல்லாமல் புள்ளி விவரங்கள் கோருதல் என்ற பெயரில் மன அழுத்தம் நிறைந்த பணிச்சூழல், தினசரி காணொலி ஆய்வுக்கூட்டங்கள், விடுமுறை நாட்களிலும் ஓய்வு வழங்காதது, துணைப்பதிவாளர் பதவி உயர்வில் வெளிப்படத்தன்மையின்மை, 3 ஆண்டுகளுக்கு மேல் பால் தணிக்கை துறையில் பணிபுரிவோரை விடுவிக்காதது போன்ற செயல்பாடுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஸ்வன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் மாரிச்சாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தேனி கிழக்கு கிளை செயலாளர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட இணைச்செயலாளர் வளர்மதி நன்றி கூறினார்.


Next Story