சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 10:56 PM IST (Updated: 12 July 2023 4:19 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தினை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளான காலமுறை ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு இணையான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.

ஒய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் மாநில செயலாளர் ரவி, மாவட்ட செயலாளர் மலர், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story