அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று மாலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சிவக்குமார், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். நிர்வாகிகள் ஜெய்சங்கர், காந்திமதி, ஜெயந்தி, தேசிங்கு, ஆதிசங்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பார்த்திபன் நிறைவுரையாற்றினார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கொரோனாவை காரணம் காட்டி முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டரை வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கணினி உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.