வீர சைவர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


வீர சைவர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2023 2:45 AM IST (Updated: 16 Oct 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வீர சைவர் பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வீர சைவர் பேரவை சார்பில் பழனி மயில் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வீர சைவ முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அருள் தலைமை தாங்கினார். வீரசைவ அய்க்யத பரிசாத் அமைப்பின் தலைவர் ஜெயபாலன், பேரவை தலைவர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆன்மிக சொற்பொழிவாளர் இமயவன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி முருகன் கோவில் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பண்டாரத்தார் இழந்த பூஜை செய்யும் முறையை மீட்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story