பெரம்பலூரில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாசி மகப்பெருந்திருவிழாவில் 5-ம் நாளான நேற்று இரவு பஞ்ச மூர்த்தி வாகனங்களான மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி-தெய்வானையுடன் முருகன், வெள்ளி ரிஷப வாகனத்தில் ஆனந்தவள்ளி அம்பாள் சமேத சந்திரசேகரர், ரிஷப வாகனங்களில் அகிலாண்டேசுவரி தாயார், சண்டிகேசுவரர் ஆகிய உற்சவ சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.