துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம்
துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு அளித்து துணை தாசில்தார்களாக நியமனம் செய்தும், 2 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் ரமேஷ்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு வத்திராயிருப்பு தாலுகா அலுவலக தலைமையிட துணைத்தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தூர் சிப்காட் நில எடுப்பு பிரிவு முதுநிலைவருவாய் ஆய்வாளராக பணியாற்றும் தவ பாண்டீஸ்வரி, காரியாபட்டி தாலுகா வட்ட வழங்கல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் மண்டல துணைத்தாசில்தாராக பணியாற்றும் சிவானந்தம் கலெக்டர் அலுவலக ஜே பிரிவு உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வத்திராயிருப்பு தாலுகா அலுவலக தலைமையிட துணை தாசில்தாராக பணியாற்றும் ராதாகிருஷ்ணன், விருதுநகர் தாலுகா அலுவலக மண்டல துணை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.