சாத்தூர் யூனியனில் வளர்ச்சி பணிகள்; அதிகாரிகள் ஆய்வு
சாத்தூர் யூனியனில் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிவகாசி,
சாத்தூர் யூனியனுக்கு உட்பட்ட இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள சிப்காட்-க்கு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ரூ.26 கோடியே 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சாலை, மேட்டமலை பஞ்சாயத்தில் மடத்துக்காடு பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 112 பயனாளிகளுக்கு வீடுகட்டும் பணிகள், மேட்டமலை நடுத்தெருவில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார். சின்னக்காமன்பட்டியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் செயல்படும் அரசு மாணவர் விடுதி, சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்தார். அப்போது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள், உயர்கல்விக்கான வாய்ப்புகள், உதவித்தொகைகள் உள்ளிட்டவைகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.