பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்


பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்
x

பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுக்கோட்டை

காரையூர் அருகே மேலத்தானியத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 2-ந் தேதி காப்பு கட்டுதல் விழாவுடன் திருவிழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 10 நாட்கள் மண்டகப்படிதாரர்கள் சார்பில் தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து இன்று மேலத்தானியம், எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, வெள்ளைக்கவுண்டம்பட்டி, ஆவாம்பட்டி, அம்மாபட்டி, முள்ளிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். மேலும் பக்தர்கள் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மேலத்தானியம் எட்டுப்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர். இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. 11- ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.


Next Story