புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் மலையில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்


புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் மலையில் குவிந்த பக்தர்கள்; நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
x

ஈரோடு அருகே உள்ள பெருமாள் மலையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஈரோடு

ஈரோடு அருகே உள்ள பெருமாள் மலையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பெருமாள் மலை கோவில்

பவானி அருகே உள்ளது பெருமாள் மலை கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைெபறுவது வழக்கம். இதில் ஈரோடு, பவானி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் மலை அடிவாரத்தில் அதிக அளவில் கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதனால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் மலை திருவிழா கோலத்தில் காட்சி தரும்.

அன்னதானம்

இந்தநிலையில் நேற்று 3-வது சனிக்கிழமை என்பதால் பெருமாள் மலைக்கு காலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். படிக்கட்டுகளில் நீண்ட வரிசையில் ஏறி மலைக்கோவிலில் இருக்கும் மங்களகிரி பெருமாளையும், ஸ்ரீதேவி பூதேவியையும் வணங்கினார்கள். இதையொட்டி துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். படிக்கட்டில் ஏறி வரும் பக்தர்களுக்கு மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

செல்பி எடுத்து மகிழ்ச்சி

இதேபோல் மலை அடிவாரத்திலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை வரை பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் இருந்தனர். பெருமாள் மலையில் இருந்து பார்த்தால் காவிரி ஆறு பவானியில் இருந்து ஈரோடு நோக்கி செல்லும் அழகிய காட்சி தென்படும். சாமி தரிசனம் செய்துவிட்டு படிக்கட்டு வழியாக கீேழ இறங்கிய பக்தர்கள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story