சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்


சேலத்தில்  சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

சேலம்

சேலம்,

தமிழ்நாடு சத்துணவு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சேலத்தில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கவேலன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அமராவதி, மாநில செயலாளர் மகேஸ்வரி உள்பட சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சேலம் கோட்டை மைதானத்தில் இருந்து ஊழியர்கள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வரை வந்தனர். பின்னர் அங்கு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்போது, 39 ஆண்டுகளாக சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்கள் அனைவரையும் ஊதிய குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியருக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர்களை அரசே சத்துணவு மையத்திற்கு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story