பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி டயாலிசிஸ் டெக்னீசியன்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி டயாலிசிஸ் டெக்னீசியன்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி டயாலிசிஸ் டெக்னீசியன்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை

பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டயாலிசிஸ் டெக்னீசியன்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு டயாலிசிஸ் டெக்னீசியன்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் பி.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, கூட்டமைப்பின் மாநில செயல் தலைவர் பி.காளிதாசன், பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.தனவந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 2021-ம் ஆண்டு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட 160 டயாலிசிஸ் டெக்னீசியன்களை, முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு மூலம் அவுட்சோர்சிங் முறைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளதை உடனடியாக கைவிடவேண்டும். அவர்களின் ஊதியமும் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக்குறைப்பு நியாயமற்றது. குறைந்தபட்ச ஊதிய சட்டத்துக்கு எதிரானது. உடனடியாக ஊதிய உயர்வும் வழங்கிடவேண்டும். மேலும் பணி நிரந்தரம், பாதுகாப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story