டிஐஜி விஜயகுமார் தற்கொலை துரதிஷ்டவசமானது: முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு


டிஐஜி விஜயகுமார் தற்கொலை துரதிஷ்டவசமானது: முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு
x

கோவை சரக டிஐஜி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது என்று டிஐஜி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சென்னை மிதிவண்டி திருவிழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:"சென்னையில் வசிக்கும் மக்கள் இங்கு வருகை தந்து சைக்கிள் திருவிழாவைப் பார்க்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடுவதை தவிர்த்து சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் இளைய தலைமுறையினர் கவனம் செலுத்த வேண்டும்.

கோவை சரக டிஐஜி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டவசமானது. அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மன அழுத்தத்தில் இருந்ததை தெரிந்து முன்கூட்டியே அதற்கான சிகிச்சைகளை எடுத்துள்ள போதிலும் இதுபோன்று நடந்துள்ளது கவலை தருகிறது" என்றார்.

1 More update

Next Story