தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

துரத்தும் தெருநாய்கள்

கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பாரதிதாசன் நகர் பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இந்த நாய்கள் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தாந்தோணிமலை.

சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி

கரூர் மாவட்டம், புன்செய் கடம்பங்குறிச்சி பெரியவரப்பாளையத்தில் ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து வருகிறது. மேலும் இதனை தாங்கி நிற்கும் தூண்கள் சிதிலமடைந்து காணப்படுவதினால் நீர்த்தேக்க தொட்டி கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜு, பெரியவரப்பாளையம்.

போக்குவரத்திற்கு இடையூறு

கரூர் மாவட்டம், மண்மங்கலம், முதல் வெண்ணெய்மலை, பழைய தேசிய நெடுஞ்சாலை வரை சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விஜயன், மண்மங்கலம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் பகுதியில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பலகார கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் அடங்கிய குப்பைகளை அங்குள்ள தார் சாலை ஓரத்தின் நெடுகிலும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பழனிசாமி, மண்மங்கலம்.


Next Story