தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

ஆபத்தான பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம், தளவாப்பாளையம், பீலிப்நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் நலனுக்காக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த நிழற்குடையில் அமர்ந்து இருக்கும்போது இந்த நிழற்குடை இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சின்னதம்பி, பீலிப்நகர்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், மலையம்பாளையம் ஊருக்கு செல்லும் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மதியழகன், மலையம்பாளையம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் ஊருக்கு முன் நெடுஞ்சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு, பல மாதங்கள் ஆகியும் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இவை காற்று பலமாக அடிக்கும்போது குப்பைகள் காற்றில் பறந்து இப்பகுதி முழுவதும் விழுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சம்பத்குமார், ரெட்டிப்பாளையம்.

பயன்பாடற்ற நீர்த்தேக்க தொட்டி

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் கரூர் சாலையோரம் விநாயகர் கோவில் உள்ளது. இப்பகுதி மக்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் கோவிலின் அருகே ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் ஆழ்குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்து தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. மேலும் நீர்த்தேக்க தொட்டியும் சிதிலமடைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பன்னீர்செல்வம், வேலாயுதம்பாளையம்.


Next Story