தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கரூர்

தண்ணீர் செல்ல தடை

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து புகழூர் வாய்க்காலில் செல்லும் தண்ணீரை தடுத்துள்ளது. வாய்க்கால் நெடுகிலும் செடி, கொடிகள் முளைத்துள்ளதால் வாய்க்காலில் தண்ணீர் வேகமாக செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புகழூர் வாய்க்காலில் நொய்யல் முதல் கடைமடை வரை முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுரேஷ், கந்தம்பாளையம், கரூர்.

ஆபத்தான மின்கம்பங்கள்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி கோனார்நகர், வடசேரி முருகன் கோவில் பின்புறம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கோனார்நகர், கரூர்.


Next Story