தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் வள்ளியூர் பி.குமாரலிங்கபுரம் சாலை பராமரிப்பு இன்றி மண் மேவி காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணக்குமார், பி.குமாரலிங்கபுரம்.

தடுப்புச்சுவர் வேண்டும்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரி சாலையில் உள்ள செங்கோட்டை ஊருணியில் தடுப்புச்சுவர் இல்லை. இந்த சாலை வழியாக தினமும் பள்ளி- கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் சென்று வருகின்றனர். எனவே போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துவேல், அருப்புக்கோட்டை.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், சேத்தூர் போன்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை விவசாய நிலங்களில் யானைகள், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைகின்றனர். எனவே இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலமுருகன், சேத்தூர்.

போக்குவரத்து ெநரிசல்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், திருச்சுழி.

தூர்வாரப்படாத ஓடைகள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர் மத்தியில் ஓடக்கூடிய ஓடைகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் முட்புதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஓடைகளில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஓடைகளை தூர்வாரி தடுப்புச்சுவர் எழுப்பி பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டீபன் ஜேசுதாஸ், ராஜபாளையம்.

தொற்றுநோய் பரவும் அபாயம்

விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலம்மாள் நகரில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் பல மாதங்களாக ஒரு இடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதில் சிலர் கழிவுகளையும் கொட்டுகின்றனர். இந்த கழிவுநீரிலிருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இந்த மழைநீரால் இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரத்ராஜா, விருதுநகர்.

கொசுக்கள் தொல்லை

விருதுநகர் மேல தெருவில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் கொசுக்களினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயச்சந்திரன், விருதுநகர்.

வாருகால் வசதி வேண்டும்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடியிலிருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் முறையான வாருகால் வசதி இல்லை. இதனால் கால்வாயில் கழிவுநீர் செல்லாமல் வெளியேறுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் வாருகால் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நரிக்குடி.

குப்பைகள் அகற்றப்படுமா?

விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே கவுசிகமா நதி ஓரத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் எழும் துர்நாற்றத்தால் இந்த பகுதியை கடக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு குப்பைகளை தினமும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.

நாய்கள் தொல்லைதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகரில் தெருநாய்கள் சாலையில் கூட்டம், கூட்டமாக சுற்றி பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், விருதுநகர்.


Next Story