திண்டுக்கல்: காவலர் குடியிருப்பில் திடீரென பற்றி எரிந்த தீ.. தீயில் கருகிய இருசக்கர வாகனங்கள்

இந்த தீ விபத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காவலர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வத்தலக்குண்டு தீயனைப்புப்படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தப்பின.
இருசக்கர வாகனங்களில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






