திருச்சி-வியட்நாம் இடையே நேரடி விமான சேவை


திருச்சி-வியட்நாம் இடையே நேரடி விமான சேவை
x

திருச்சி-வியட்நாம் இடையே நேரடி விமான சேவையை வியட்ஜெட் விமான நிறுவனம் தொடங்குகிறது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சியில் இருந்து வியட்நாமுக்கு புதிய விமான சேவை இயக்கப்பட உள்ளது. இந்த சேவையை வியட் ஜெட் விமான நிறுவனம் தொடங்க இருக்கிறது. இதுகுறித்து வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக துணை தலைவர் லிங்கேஸ்வரா திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

வியட்ஜெட் விமான நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் வகையில் நவம்பர் மாதம் 2-ந் தேதி முதல் திருச்சி-வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும், ஹோ சி மின் சிட்டி- திருச்சி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும் இயக்க இருக்கிறது. இந்த விமானங்கள் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு ஹோ சி மின் சிட்டிக்கு அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல் அங்கிருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது. இந்தியாவில் இருந்து வியட்நாம் செல்லும் விமானங்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரையிலான காலத்தில் ஒருவழி கட்டணமாக ரூ.5,555 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story