மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி


மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி
x

பாளையங்கோட்டையில் மாணவ-மாணவிகளுக்கு மாறுவேடப்போட்டி நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. திடலில் நேற்று கருணாநிதி மாறுவேட போட்டி நடைபெற்றது. இதில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கும் மாணவ-மாணவிகள் கருணாநிதி வேடம் அணிந்திருந்தனர்.

அவர்கள் கருணாநிதி போல் பேசி, நடித்து காட்டினார்கள். ஒருசிலர் பாரதியார், தமிழ்த்தாய் போன்ற வேடம் அணிந்திருந்தார்கள்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். போட்டியின் நடுவர்களாக கவிஞர் மூர்த்தி, பாப்பாக்குடி செல்வமணி, கவிஞர் பாமணி ஆகியோர் செயல்பட்டனர்.


Next Story