போதைப்பொருள் தடுப்பு துண்டு பிரசுரம் வினியோகம்


போதைப்பொருள் தடுப்பு துண்டு பிரசுரம் வினியோகம்
x

போதைப்பொருள் தடுப்பு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின்பேரில், சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. குடிமக்கள் நுகர்வோர் மன்றம், தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். நெல்லை கோட்ட கலால் அலுவலர் இசக்கிபாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பேசினார்.

பள்ளி செயலாளர் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் ஆலை முதுநிலை மேலாளர் (மனிதவளம்) நாராயணசாமி, பள்ளி நிர்வாக அலுவலர் சீனிவாசன், தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ரங்கநாதன் நன்றி கூறினார்.


Next Story