கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகிப்பதாக பொதுமக்கள் புகார்

தென்காசி அருகே கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகிப்பதாக பொதுமக்கள் புகார்
Published on

தென்காசி அருகே மேலகரத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் மேலகரம் வடக்கு தெருவில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த குடிநீரில் கழிவு நீர் கலந்தது போன்று கருப்பு நிறத்தில் தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து குடிநீர் வினியோகத்தை நிர்வாகம் நிறுத்தி இதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏற்கனவே இது போன்று மூன்று முறை இதே பகுதியில் கழிவு நீர் கலந்து குடிநீர் வந்ததால் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ள இடத்தை தோண்டி பார்த்து சரி செய்தனர். ஆனால் மீண்டும் நேற்று இதே போன்று வந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com