தீபாவளி முன்பதிவு; 10 நிமிடத்தில் ரெயில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரெயில் முன்பதிவு இன்று துவங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களின் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
சென்னை,
தீபாவளி பண்டிகையானது வருகிற நவம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்க்கும் ஏராளமானோர் சொந்த ஊருக்கு திரும்புவர். அவர்களில் பஸ், ரெயில் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்.
முன்னதாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான ரெயில் டிக்கெட் முன்பதிவுகள் ஜூலை 12ம் தேதி தொடங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்து இருந்தது.
அதன்படி தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரெயில் முன்பதிவு இன்று துவங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. நவம்பர் 9ம் தேதிக்கான பாண்டியன் மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2ம் வகுப்பு படுக்கை டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 2ம் வகுப்பு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. வைகை, திருச்செந்தூர், குருவாயூர் விரைவு ரெயில்களில் மட்டுமே 2ம் வகுப்பு படுக்கை டிக்கெட்டுகள் உள்ளன.