தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய இதுவரை 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை,

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை, சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்தது.

அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) முதல் 11-ந் தேதி வரை 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக தினமும் இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக 1,365 பஸ்கள் வீதம் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 4,675 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு தயாராக உள்ளன.

சிறப்பு பஸ்களில் முன்பதிவு செய்து பயணம் செய்ய மக்கள் தயாராக உள்ளனர். இதுவரையில் 1 லட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறப்பு பஸ்கள் மாதவரம் புதிய பஸ் நிலையம், கே.கே. நகர் மாநகர பஸ் நிலையம், தாம்பரம் அண்ணா பஸ் நிலைய நிறுத்தம், பூந்தமல்லி விரைவுச்சாலை பஸ் நிறுத்தம் மற்றும் கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து நாளை இயக்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com