தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
பாளையங்கோட்டையில் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பு அணிகள் நிர்வாகிகள் கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கே.கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் அன்வர் உசேன், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் வக்கீல் பாலச்சந்தர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் பிரகாஷ், மாவட்ட நெசவாளரணி தலைவர் அமானுல்லா, மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அணி தலைவர் பொ.சுந்தர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பொதுக்கூட்டம், தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story