தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 5:21 PM IST)
t-max-icont-min-icon

தேனி பழைய பஸ் நிலையம் அருகில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி பழைய பஸ் நிலையம் அருகில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாமலை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் பத்ரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

இதில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் மற்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை பா.ஜ.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறியும், பா.ஜ.க. அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.


Next Story