தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங்கடம் மரணம்

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங்கடம் மரணம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங்கடம் மரணம்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. பெ.சு.திருவேங்கடம் (வயது 89). இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான அவர் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக இருந்தார். கலசபாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆட்சி காலம் முதல் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். தற்போது இவரது மகன் பெ.சு.தி. சரவணன் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இறந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான பெ.சு.திருவேங்கடத்தின் உடல் அவரது சொந்த ஊரான பெரியகிளாம்பாடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். திருவேங்கடம் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com