தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x

நெல்லையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டம்

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் சந்திப்பு சிந்துபூந்துறையில் நடைபெற்றது. மைக்கிள் பிரபாகர் என்ற பிரபு தலைமை தாங்கினார். கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் வரவேற்றார்.

இதில் தி.மு.க. மாநில அமைப்பு துணை செயலாளர் ஆஸ்டின், கொள்கை பரப்பு துணை செயலாளர் வேலூர் டாக்டர் விஜய், நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர துணை செயலாளரும், கவுன்சிலருமான சுதா மூர்த்தி, முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா, நிர்வாகிகள் சுப.சீதாராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை நெல்லை சி.பா.ராவணன் தொகுத்து வழங்கினார். கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ் செய்திருந்தார்.

சுகாதார வளாகம்

பாளையங்கோட்டை மண்டலம் 5-வது வார்டு பாளையங்கோட்டை கக்கன்நகரில் ரூ.24 லட்சத்தில் புதிய சுகாதார வளாகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. கவுன்சிலர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நெல்லை மாநகராட்சி பகுதியில் ஒவ்வொரு வார்டு வாரியாக கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது.

பாளையங்கோட்டை சாந்திநகரில் நடந்த நிகழ்ச்சிக்கு கவுன்சிலர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

பாளையங்கோட்டை லூர்துநான் சிலை அருகே நடந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு மாநகர அவைத்தலைவர் வேலு என்ற சுப்பையா முன்னிலை வகித்தார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கொடியேற்றினார்.

கண்சிகிச்சை முகாம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கம், நெல்லை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி சார்பில், பேட்டை ராணி அண்ணா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

அரவிந்த் கண் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். மாவட்ட அவைத்தலைவர் வி.கே.முருகன், பேட்டை ரூரல் பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story