தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்


தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2022 12:15 AM IST (Updated: 22 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலத்தில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க. பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்லக்குட்டி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஆலங்குடி வைத்தியநாதன், பேரூர் செயலாளர் சம்சுதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பேரூர் அவைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் நியமனம் செய்யப்பட்டதற்கு செயற்குழுவுக்கு நன்றி தெரிவிப்பது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் அன்பழகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர், ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி சஞ்சய் வெங்கட்ராஜ் நன்றி கூறினார்.


Next Story