துரைசாமிபுரம் கிராமத்தில் வாறுகால் அமைக்கும் பணி


துரைசாமிபுரம் கிராமத்தில் வாறுகால் அமைக்கும் பணி
x

கோவில்பட்டி அருகே துரைசாமிபுரம் கிராமத்தில் வாறுகால் அமைக்கும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே முடுக்கு மீண்டான்பட்டி பஞ்சாயத்து எம். துரைச்சாமிபுரம் கிராமத்தில் மாவட்ட பஞ்சாயத்து, மத்திய நிதி குழு திட்டத்தில் ரூ.9½ லட்சம் செலவில் பேவர் பிளாக் ரோடு, மற்றும் வாறுகால் அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர். அருணாச்சலம், அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஆர். சத்யா, ஒன்றியச் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story