இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது - சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது  -  சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
x

இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர்.

சென்னை,

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து வருகிறார். அதில்,

ஆசிரியராய் இருந்து அவைக்கு தலைமை ஆசிரியராக மட்டுமல்ல, சட்டமன்றத்திற்கு தலைமை ஆசானாக விளங்கி வருகிறார் பேரவைத்தலைவர்.

இலவச மின்சாரம் கிடைக்கிறது. பள்ளி செல்லும் மாணவர்களின் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது. திராவிட மாடல் என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது. மொழி உரிமை இன உரிமை என்பதே சாசனம்.

அவதூறூகளை வீசினாலும் மக்களை யாராலும் வெல்ல முடியாது. மக்களின் மனங்களை மாற்ற முடியாது.

1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளார்கள். மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது. இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளனர்.

மக்களுக்கு நேரடியாக, தினமும் பலன் தரும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை. தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்கள் மனங்களையும் வென்றிருக்கிறோம்.

இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது. மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் சாதி, மதச்சண்டைகள் இல்லை, கூட்டு வன்முறை இல்லை, கலவரங்கள் இல்லை, துப்பாக்கிசூடு இல்லை;

இதன் அடையாளமாகத்தான் தொழிற்சாலைகள், தொழில் முதலீடுகள் இங்கே வருகின்றன.

நிதி நெருக்கடிக்கும் மத்தியில் ஆட்சிக்கு வந்தபோதிலும் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்து வருகிறோம். தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறையை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்திருக்கிறோம் என்றார்.


Next Story