கடைகள், நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம்: அரசிதழ் வெளியீடு


கடைகள், நிறுவனங்கள் திருத்தச் சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர், கழிவறை வசதிகள் அவசியம்: அரசிதழ் வெளியீடு
x

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. தொழிலாளர்களின் நலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிவறை, முதலுதவி வசதிகள் தொடர்புடைய வரைமுறைகள் தொடர்பான மசோதா ஏப்ரல் 13ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்போது சட்டமாகியுள்ளது.

கடைகள் , நிறுவனங்கள் திருத்த சட்டத்தின்படி பணிபுரியும் இடத்தில் குடிநீர் , கழிவறை வசதிகள் அவசியம்.போதிய காற்றோட்டத்துடன் கூடிய ஓய்வறை சாய்வு நாற்காலிகள் , முதலுதவி பெட்டிகள் இடம் பெற வேண்டும்.. என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story