சென்னை பெருநகர காவல்துறையில் டிரோன் காவல் பிரிவு: தொடங்கி வைத்தார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு

சென்னை பெருநகர காவல்துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ட்ரோன் காவல் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்
சென்னை பெருநகர காவல்துறையில் டிரோன் காவல் பிரிவு: தொடங்கி வைத்தார் டி.ஜி.பி. சைலேந்திர பாபு
Published on

சென்னை,

சென்னை பெருநகர காவல்துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ட்ரோன் காவல் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவு போக்குவரத்து நெரிசலை கண்டறிந்து உடனே சரிசெய்ய, திருவிழா போன்ற கூட்டம் நிறைந்த இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்வது போன்ற பல பணிகளை மேற்கொள்ள உள்ளது

இதில் டிரோன்களை 5 கி.மீ தொலைவு வரை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்க முடியும் என்றும் கூறப்பட்டு உள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com