கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு
கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர்
நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். அப்போது தங்கள் வசிக்கும் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்க துண்டு பிரசுரத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும், போதைப் பொருட்களின் தீமை குறித்து எடுத்துக் கூறி அடுத்த தலைமுறையை காக்க வேண்டும். இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாதவாறு தடுக்க எங்களுக்கு உதவி புரிய வேண்டும் என கூறினார்.
சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், தனிப்பிரிவு ஏட்டு செந்தில், பள்ளி முதல்வர் பாஸ்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story