போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
தக்கோலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம், தக்கோலம் போலீஸ் நிலையம் சார்பில் நடைபெற்றது. சப்-இன்ஸ்பெக்டர் தீபன் சக்ரவர்த்தி கலந்துகொண்டு கஞ்சா, மது, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பற்றி மாணவரிடம் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஓம் பிரகாஷ், தனி பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story