மழை இல்லாததால் வேகமாக சரியும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்...!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மழை இல்லாததால் வேகமாக சரியும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்...!
Published on

மேட்டூர்,

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், ஒகேனக்கல் காவிரி மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது.

அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 3,483 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 3,123 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடியும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணைக்கு வரத்தை காட்டிலும், நீர்திறப்பு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 117.48 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று 117.06 அடியாக சரிந்தது. கடந்த 6 நாட்களில் நீர்மட்டம் 2.94 அடி வரை சரிந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com